அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றவர்களுக்காக பயன்படுத்துகின்றவர்களைப் பதிவு செய்யும் செயல்முறையொன்று தேசிய அதிகாரசபையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரசாயன ஆயுத உடன்படிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிற இரசாயன பொருட்களை உற்பத்தி செய்தல், தயாரித்தல், கைப்பற்றுதல், நுகர்தல், மாற்றுதல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல் ஆகிய பணிகளில் ஏற்றுமதி கம்பனியொன்று/வர்த்தகர் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அவர்கள் இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையில் பதிவு செய்துகொள்ளல் அவசியமாகும். பதிவு இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும். அதன் பின்னர் குறித்த கம்பனி பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள் இறக்குமதியாளருக்கு/ ஏற்றுமதியாளருக்கு உத்தரவு பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள் இறக்குமதிக்கு/ ஏற்றுமதிக்குத் தேவைப்படுகின்ற பரிந்துரைகளை தேசிய அதிகாரசபை இறக்குமதி/ ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு வழங்குகிறது. இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டளரிடமிருந்து உத்தரவுப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய அதிகாரசபையிள் பூர்வாங்க பரிந்துரை தேவைப்படும்.

பொறுப்புள்ள அமைப்புகளின் கோரிக்கைகளின் பிரகாரம் இரசாயன பொருள் தொழிற்சாலைகளில் இரசாயன பொருள் விபத்துக்கள் அல்லது சம்பவங்களைக் குறைத்துக்கொள்வதற்காக திடீர் சந்தர்ப்ப முகாமைத்துவ திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது தரப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் நிபுணர்களின் உதவிகளையும் தேசிய அதிகாரசபை வழங்குகிறது.

இரசாயன தொழில் உடன்படிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் அது கைத்தொழிலுக்கு தாக்கமேற்படுத்தியது எப்படி என்பதைப்பற்றியும் விழிப்புணர்வூட்டும் பல நிநழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. அத்துடன் அடுத்துவரும் ஆண்டிலும் கைத்தொழிலுக்காக பல அறிவூட்டும் பயிற்சித்திட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன. இந்நிகழ்ச்சித்திட்டங்களின்போது இரசாயன ஆயுத உடன்படிக்கையின் கடப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் 2007ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க சட்டத்தின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான அறிவை ஏற்படுத்தி இரசாயனப் பொருட்களின் இறக்குமதியின்போது/ ஏற்றுமதியின்போது முகம்கொடுத்த சிக்கல்கள் கலந்துரையாடப்படுகிறது.

தேசிய அதிகாரசபை தொல்லைதரும் இரசாயன பொருள் முகாமைத்துவம் தொடர்பான பல பயிற்சிநெறிகளை நடாத்துகிறது. தொல்லைதரும் இரசாயனப் பொருட்களுடன் செயலாற்றுகின்ற நபர்களுக்கு அறிவை வழங்குவது. தொழில்நுட்ப ஆற்றலை வளர்ப்பது, நிலைபேறான கைத்தொழில் அபிவிருத்திக்காக தொழிற்சாலையொன்றில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாத்துப் பேணுதல் என்பவற்றை உயர்த்துவது இந்நிகழ்ச்சித் திட்டங்களின் நோக்கமாகும்.

அட்டவணைப்படுத்தப்பட்ட நச்சுத்தன்மையுள்ள இரசாயனபப் பொருட்களையும் அவற்றின் மூலப்பொருட்களையும் சமாதானமான காரியங்களுக்கு மாத்திரம் பயன்படுத்துவது என்பதைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்பொருட்டு உரிய நடவடிக்கைகளைத் தயாரித்தல்.

நிலைபேறான கைத்தொழில் அபிவிருத்தியொன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக இரசாயன அவசர நிலையின்போது பாதுகாப்பும் பாதுகாப்பாகப் பேணும்தன்மையும் மிக முக்கியமான அம்சமாகும். ஆகவே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கைத்தொழில வலயத்திலும் அத்தகைய அவசர நிலைகளுக்கு முகம்கொடுப்பதற்காக அவசர சந்தர்ப்ப திட்டமொன்று இருக்க வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக அத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்பொருட்டு தேசிய அதிகாரசபை தொல்லைதரும் இரசாயனப் பொருட்களை விநியோகிப்பவர்கள் மற்றும் பல்வேறு களஞ்சிய வசதிகள் தொடர்பாக ஆய்வொன்றை நடத்துகிறது. அவ்வாய்வின்மூலம் தொல்லைதரும் இரசாயனப் பொருட்கள், பயன்படுத்துகின்ற, களஞ்சியப்படுத்துகின்ற அல்லது தயாரிக்கின்ற இடங்கள் அடையாளம் காணப்படும். இலங்கையில் இந்த எந்தவொரு தொழிற்சாலையில்/வலயத்தில் திடீர் அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கு உற்பத்தித்திறன் மிக்கவகையில் பதிலளிக்கும்பொருட்டு திடீர் அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றையும் தரவு முறைமையொன்றையும் தயாரிக்க வேண்டும்.

தேசிய அதிகாரசபை, ஆயுதப்படை, பொலிஸ், தீயணைப்பு திணைக்களம், சுகாதார பிரிவு, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், சுகாதார பிரிவு, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுக்கு இரசாயன திடீர் அனர்த்தங்னகளுக்கு முகம்கொடுப்பதற்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் கலந்துகொள்கினற்வர்களுக்கு, அவர்கள் முதலில் பதிற்செயலாற்றுகின்றவர்களாகத் தகமை பெற்றதன் பின்னர் முக்கியமான பாத்திரமொன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. பதிற்செயலாற்றுகின்ற இந்நபர்கள் திடீர் அனர்த்தநிலைகள் ஏற்பட்டால், விடுவித்தல், உதவியளித்தல், எச்சரிக்கைசெய்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவார்கள்.

கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சில இரசாயனப் பொருட்கள் இரசாயன ஆயுத உற்பத்தியில் நேரடியாகத் தொடர்புடையனவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 'இரட்டை – பாவிப்பு' இரசாயனப் பொருட்கள் சமாதானமான செயல்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சான்றுப்படுத்துவதற்கு அவை வாணிப மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்வது இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இரசாயன ஆயுத உடன்படிக்கையை தேசியரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப்பொருட்களை இறக்குமதி செய்கின்றவர்களையும் பயன்படுத்துகின்றவர்களையும் பதிவுசெய்யும் நடைமுறையும் அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப்பொருட்களின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உத்தரவு பத்திர முறையொன்றையும் ஆரம்பிப்பது சட்டத்தின்மூலம் வலுவுள்ளதாக்கப்படும். அத்துடன் ஆகக்கூடியதாக விற்பனை செய்யப்படுகின்ற 37 இரசாயனப்பொருட்களுக்கு விசேடமான எச்.எஸ். குறியீடுகளை வழங்குவதற்கு இலங்கை சுங்கப்பபகுதியுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.