இலங்கை 1993 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் திகதி இரசாயன ஆயுத உடன்படிக்கையில் (இ.ஆ.உ) கையொப்பமிட்டுள்ள அதேவேளையில் 1994 ஆகஸ்ட் 19ஆம் திகதி அது அங்கீகரிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்தவதற்கான சட்டம் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில் 2008 ஆகஸ்ட் 15ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் வலுவுள்ளதாக்கப்பட்டது.

இ.ஆ.உ என்பது இரசாயன ஆயுதங்களை மேம்படுத்துதல், தயாரித்தல், சேகரித்தல், பயன்படுத்துதல் என்பவற்றைத் தடைசெய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான உடன்படிக்கைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொது பெயராகும். இத்தொகுதிக்குரிய ஆயுதங்களை உறுதி செய்யக்கூடியவகையில் ஒழிப்பதற்காக முயற்சி செய்கின்ற இரசாயன ஆயுத உடன்படிக்கை சர்வதேச உடன்படிக்கையாகும். அது அடிப்படையாக தேசிய நிகழ்ச்சித் திட்டங்களையும், மறைமுகமாக இரசாயன பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எடுத்துரைக்கிறது.

இலங்கை உட்பட உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கைத்தொழில், விவசாயம், ஆராய்ச்சி, மருத்துவம், ஒளஷதம் மற்றும் ஏனைய சமாதான பணிகளுக்காகத் தமது உற்பத்திப் பணிகளின்போது நச்சு இரசாயனப் பொருட்களையும் அவற்றின் மூலப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள கம்பனிகளும் வியாபார நிறுவனங்களும் இருக்கின்றன. இந்த இரசாயனப் பொருட்களின் சிலவற்றை இரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அத்தகைய இரட்டைப் பாவனை இரசாயனப் பொருட்கள் இருப்பதனால், அத்தகைய இரசாயனப் பொருட்கள் சார்ந்த கைத்தொழில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் மிகவும் முக்கியமானதாகும்.

இரசாயன ஆயுத உடன்படிக்கைக்கான தனது கடப்பாட்டை நிறைவேற்றும்பொருட்டு 'இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்காகவுள்ள அமைப்பு மற்றும் ஏனைய பங்காளர் அரசுகளுடன் உற்பத்தித் திறன்மிக்கவகையில் தொடர்புகளைப் பேணுவதற்காக தேசிய மைய நிலையமாக செயலாற்றும்பொருட்டு இலங்கை தேசிய அதிகாரசபையொன்றை அமைக்க வேண்டும். 2006 மே 31ஆம் திகதியிட்ட 06/0982/2134/014ஆம் இலக்க அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் தேசிய அடிப்படையில் இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு பெயரிடப்பட்டது.

இச்சட்டத்தின் பிரகாரம், இலங்கை,

  • தேசிய கேந்திர நிலையமாக செயற்படுவதற்காக அதிகாரசபையொன்றை அமைக்க வேண்டும்..
  • நச்சு இரசாயனப் பொருட்களின் பயன்பாட்டை ஒழுங்குறுத்த வேண்டும்.
  • அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களின் பயன்பாட்டைப் பரிசீலிப்பதற்காக தவணை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு தொடர்பாக வருடாந்த கூற்று ஒன்றை இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்புக்கு (இ.ஆ.த.அ) சமர்ப்பிக்க வேண்டும்.
  • உடன்படிக்கையின் கீழ் உள்ள ஏனைய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
ஐ.நாவுடன் இ.அ.த. அமைப்புக்குள்ள தொடர்பு

இவ்வமைப்பு ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனமாக இல்லாவிட்டாலும்கூட கொள்கை ரீதியான மற்றும் அரசியல் விடயங்களின்போது ஒத்துழைப்பு நல்கி செயற்படுகிறது. தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது எப்படி என்பதை விபரித்து, 2007 செப்டம்பர் 07ஆம் திகதி இ.ஆ.த.அமைப்பு ஐக்கிய நாடுகளுக்காக உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட்டது. இரசாயன ஆயுத பரிசோதகர்கள் ஐக்கிய நாடுகளின் பிரயாண ஆவணமொன்றை (Laissez-Passer) தமது சுற்றுலாவுக்காகப் பயன்படுத்துகின்ற அதேவேளையில் அவர்களின் பதவி சிறப்புரிமை மற்றும் பாதிப்பின்மையை விபரிக்கின்ற ஸ்டிக்கர் ஒன்று அதில் ஒட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் வலய குழுக்களும் நிறைவேற்று சபையில் தவணை அடிப்படையில் பதவிகள் மாறுவதை கட்டுப்படுத்தவதற்காகவும் இ.ஆ.த. அமைப்பில் செயற்படுகின்றன. அத்துடன் உத்தியோகபற்றற்ற பேச்சுவார்த்தைக்கான மேடையையும் வழங்குகிறது.