இரசாயனப் பொருட்கள்

கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனப் பொருட்களும் அவற்றின் மூலப் பொருட்களும் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் பணிக்காக இவ்வட்டவணையின் மெய்ப்பிக்கும் பின்னிணைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் மெய்ப்பிக்கும் நடைமுறைகள் - பயன்பாடு என்பவற்றுக்கு இரசாயனப் பொருட்கள் இனம் காணப்படுகின்றன. 11வது உறுப்புரையின் துணைப் பந்தி 1 (1) பிரகாரம் இவ்வட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தொடர்பான வரைவிலக்கமொன்று அமைக்கப்படவில்லை.

(இரட்டை அல்கையில இரசாயன பொருட்கள் வகுப்பும் அதன் பின்னர் அடைப்புக் குறிக்குள் அல்கையில பட்டியலொன்று குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு சந்தர்பப்த்தில், அடைப்புக் குறிக்குள் பட்டியல்படுத்தப்பட்டுள்ள அல்கையில வகுப்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து கலவைகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து இரசாயனப் பொருட்கள், அவை திட்டவட்டமாக பொருள்கோடப்படாமை பெயர்களைத் தவிர்த்து, குறித்த அட்டவணையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இரண்டாவது அட்டவணையில் 'அ' பிரிவில் * அடையாளமிடப்பட்டுள்ள இரசாயன பொருளொன்று பட்டியல்படுத்தப்பட்டுள்ள பின்னிணைப்பில் VII பிரிவில் திட்டவட்டமாக காட்டப்பட்டுள்ளவாறு வெளியிடுவதற்கும் உறுதிசெய்வதற்கும் விசேட பிரிவுக்குட்படும்.)