பொதுவாக பரிசோதித்தல்

அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப்பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தேவைகளுடன் அரச தரப்பின் இணங்கியொழுகும் தன்மையை உறுதிசெய்து கொள்வதற்கும் இ.ஆ.உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாடுகளின் பிரகாரம் அங்கத்துவ நாடுகளில் கைத்தொழில் நடவடிக்கைகள் சரியாக வெளியிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு பரிசோதித்தல் திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனை செய்வதன் தீவிர தன்மையும் தவணைமுறைகளும் தங்கியிருப்பது உற்பத்தி செய்யப்படுகின்ற இரசாயனப் பொருட்கள் (இறங்குவரிசைப்படி – அட்டவணை 1, அட்டவணை 2, அட்டவணை 3 அல்லது DOC, அட்டவணைப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களைப் பார்க்கவும்) மீது அன்றி அங்கத்துவ நாட்டின் நிலைமைகளின் மீது அல்ல. 1ஆம் 2ஆம் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி செய்யபப்டுகின்ற அனைத்து இரசாயனப்பொருட்களுக்கும் பொறுப்புக்கூற முடியுமா என்பதை அறிந்துகொள்வதற்கும் அந்த அளவு அங்கத்துவ அரசுகள் வெளியிட்டுள்ள அளவுகளுடன் இணங்குகின்றதா என்பதைக் கண்டறிவதற்கும் அளவுகோலொன்று தயாரிக்கப்படும். மேலும் 2ஆம் 3ஆம் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளில் வெளியிடப்பட்ட மற்றும் உடன்படிக்கையின் சட்டதிட்டங்களுக்கு முரணாக 1ஆம் அட்டவணையின் இரசாயனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காக பரிசோதிக்கப்படும். அட்டவணை 3 மற்றும் DOC யின் அடிப்படை நோக்கமானது பிரகடனத்தைப் பரிசோதிப்பதும் அட்டவணை 2, அட்டவணை 1 என்பவற்றில் உற்பத்தி அலகுகள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வதுமாகும். 2ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடங்களைப் பரிசோதிப்பதற்கான காலவரையறை 96 மணித்தியாலங்களாகும். அத்துடன் அட்டவணை 3 மற்றும் DOC யை பரிசோதிப்பதற்காக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆகக்கூடிய காலம் 24 மணித்தியாலங்களாகும். 1ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடங்களைப் பரிசோதிப்பதற்கான காலவரையறையில்லை.

சவாலுக்குரிய பரிசோதனைகள் மற்றும் தவறான பயன்பாடுகள்பற்றிய விசாரணை

இரசாயன ஆயுதங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டால், உடன்படிக்கையின் பிரகாரம் விடயங்களைக் கண்டறியும் பரிசோதனைக் குழுவொன்றை ஈடுபடுத்த முடியும். ஆனால் இற்றைவரை அத்தகைய பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த சவாலுக்குரிய பரிசோதனைகளை நடாத்துவதற்கு இன்னுமொரு அங்கத்துவ நாடொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் மீது, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் சரியான தன்மையை சான்றுப்படுத்தியதன் பின்னர் மாத்திரமே இ.ஆ.த.அமைப்பு ஏற்றுக்கொள்ளும். இதை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அத்தகைய பரிசோதனைகளைத் தடைசெய்ய முடியும். மேலும் இருதரப்பு தூதரக தீர்வுக்கு முயற்சித்து தோல்வியடைந்தால் மாத்திரமே இ.ஆ.த.அமைப்புக்குத் தலையிட முடியும்.

இவ்வாண்டு பரிசோதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்
திகதி தொழிற்சாலை
சனவரி 09 டிப்ட் புரடக்ட் (தனியார்) கம்பனி
மார்ச் 22
மார்ச் 25
மே 05
யூன் 23
யூலை 16
ஆகஸ்ட் 20