இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை

Welcome to web site of the National Authority for Implementation of the Chemical Weapons Conventions in Sri Lanka (NACWC), under the Ministry of Defence. NACWC provides a quality and efficient services to its clients mainly for industrialists and chemical importers/exporters. You can browse through the website periodically to know about our future plans, online applications for import/export chemicals, valuable information to enhance chemical security, safety and health factor in your premises and useful web links related to chemical weapons convention. For now, I invite you to our website for an interesting and educative journey.

நிகழ்வுகளும் சம்பவங்களும்

வேதியியல் ஆயுதங்கள் மாநாடு குறித்த ஆசியாவில் உள்ள தேசிய அதிகாரிகளின் OPCW 23வது பிராந்தியக் கூட்டம்

இரசாயன ஆயுதக் கூட்டமைப்பைத் தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) ஆசியப் பிராந்திய உறுப்பு நாடுகளின் தேசிய அதிகார சபைகளின் 23வது பிராந்தியக் கூட்டம் 2025 ஜூலை 01 முதல் 03 வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை அமுல்படுத்தும் தேசிய அதிகார சபையின் (NACWC) பணிப்பாளர், எயார் வைஸ் மார்ஷல் ஷெஹான் விஜயநாயக்க அவர்கள் இம்முக்கிய பிராந்திய நிகழ்வில் கலந்துகொண்டார். இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை (CWC) அமுல்படுத்துவதில் தேசிய, உப-பிராந்திய மற்றும் பிராந்திய ரீதியான அனுபவங்களை தேசிய அதிகார சபைகள் கலந்தரையாடுவதற்கு இக்கூட்டம் ஒரு முக்கிய தளத்தை வழங்கியது. பிரதிநிதிகள் தத்தமது நாடுகளில் இரசாயன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள், முன்னுரிமைகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சித்திட்டத்தின் போது, இலங்கையின் இரசாயன ஆயுதக் கூட்டமைப்பை அமுல்படுத்தும் தேசிய அதிகார சபையின் (NACWC) பணிப்பாளர், மலேசியப் பிரதிநிதிகளுடன் இணைந்து ஒரு கலந்துரையாடல் குழுவில் பங்கேற்றார். இதில் வழிகாட்டல் கூட்டாண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் (MPP) வெற்றியை எடுத்துரைத்து அதன் எதிர்கால திசை குறித்து ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடல் இரு நாடுகளுக்கிடையேயான வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டியது. இக்கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் உதவி மற்றும் பாதுகாப்பு அடிப்படைப் பாடநெறியை நடத்துவதற்கான இலங்கையின் நோக்கம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இலங்கையின் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ITI) இணைந்து இரசாயன ஆயுதக் கூட்டமைப்பின் (CWC) பகுப்பாய்வுத் திறன்களை நிறுவுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. இந்த முயற்சிகள், இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் (OPCW) ஆதரவுடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

Colombo, Sri Lanka
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கான NACWC விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்.

பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு உணர்த்துவதற்காக இரசாயன ஆயுதங்கள் மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இன்று (மார்ச் 26) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. மேற்படி விழிப்புணர்வு நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் விருந்தினர் பேச்சாளராக அமெரிக்க குடிமக்கள் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு விடயங்கள் தொடர்பான நிபுணரான கலாநிதி ரோஹன் பி. பெரேரா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தேசிய அதிகாரசபையின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் (கலாநிதி) ரவி ரணசிங்க, ஹோமாகம நீர் பராமரிப்பு மற்றும் இரசாயன சேமிப்பு தொழிற்சாலை மற்றும் கந்தானை இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட தீ போன்றவற்றை மேற்கோள் காட்டி அண்மைக்காலமாக இலங்கையில் இரசாயன அபாயம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இதன்போது சுட்டிக்காடினார். ஜனாதிபதியின் ஆலோசனைகளின்படி, தேசிய பாதுகாப்பு இரசாயனச் சட்டம் மற்றும் இரசாயனங்கள் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒன்லைன் அமைப்பு (CM&RS) ஆகியவற்றை உருவாக்க இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் எடுத்த முயற்சிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். கலாநிதி ரொஹான் பி பெரேரா அவர்களின் விரிவுரையின் போது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான முக்கியமான தேவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அரசு சாரா நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வர்த்தகத்தின் உலகமயமாக்கல் ஆகியவற்றுடன், இந்த இரட்டை பயன்பாட்டு பொருட்கள் தவறானவர்களின் கைகளில் விழும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவற்றின் பெருக்கத்தை எதிர்கொள்ள வலுவான நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், இவ்வாறான நடவடிக்கைகளில், ஒழுங்குமுறையான செயல்முறைகளை மேம்படுத்துவது மற்றும் தரத்தை உயர்த்துவதற்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை அமைப்புகளால் இரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழிலதிபர்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார். இந்த நிகழ்வில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படையின் தளபதிகள், அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த திருமதி சாரா வெல்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Colombo, Sri Lanka

பயிற்சி திட்டங்கள்

  • 2023-05-24
Successfully Conducted Capacity building Program for Fire Fighting Personnel on Chemical Emergency Management on 24th-26th May 2023

Capacity Building Program for Fire Fighting Personnel in western province on Chemical Emergency Management Organized by the National Authority for the implementation of the Chemical Weapons Convention...

Read More..
  • 2023-05-19
Capacity building Program for Fire Fighting Personnel on Chemical Emergency Management to be held on 24th-26th May 2023

Sri Lanka Fire Service Department is the most responsible responding agency for responding to chemical emergencies in the country. The success of chemical emergency response activities highly depend...

Read More..
  • 2023-05-17
Lecture assistance for SLE CBRN first responders basic course

Lecture assistance was given by the NACWC Staff for the CBRN basic training programme conducted by 14th Engineers regiment at Army Camp Mattegoda on 17 May 23. Sixty five (65) trainees including Offic...

Read More..
  • 2023-03-21
Awareness Programme for Scheduled Chemical Users

As a regulatory body, NACWC believes that enhancing the awareness of the regulatory frame-work to the scheduled chemical users is more beneficial during service providing more efficiently and effectiv...

Read More..